RSS

அனிதாவும் ஜெஸ்ஸியும்.

24 Dec

ஏழு கழுதை வயதானாலும் அழகான காதல் படங்களைப் பார்க்கும்போது இதயத்தில் வலி/ஏக்கம்/உற்சாகம் கலந்த உணர்வுகள் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை.பழைய நினைவுகளை,ஏக்கங்களை அது கிளறி விட்டு கொண்டேயிருக்கின்றது. காதலைப் போலவே, காதல் படங்களும் என்றும் அலுப்பதில்லை.சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்த போது,தேவியில் 7G Rainbow Colony பார்த்து பித்து பிடித்தவன் போல் ஆனேன்.அனிதாவின்(சோனியா அகர்வால்) மரணம், கதிரைவிட (ரவிகிருஷ்ணா) என்னை அதிகம் பாதித்தது.தியேட்டரைவிட்டு வெளியே வர மனமேயில்லை.கனத்த வலியோடு நானும் என் நண்பனும் வெளியே வந்தோம்.அடுத்த காட்சிக்கு நின்றோர்களை பார்க்கும்போது பொறாமையாகவும், வருத்தமாகவும் இருந்தது.படம் பார்க்க உள்ளே போக போகிறார்களே என்ற பொறாமையும்;அனிதாவின் மரணத்தை அவர்கள் எப்படி எதிர் கொள்ள போகிறார்கள் என்ற வருத்தமும் இருந்தது.அடுத்த ஒரு வாரம் படத்தின் இறுதி காட்சிகள் மனதில் திரும்ப திரும்ப ஓடிக்கொண்டிருந்தது.வேறு எதிலும் என்னால் கவனம் செலுத்தமுடியவில்லை.கிட்ட திட்ட ஆறு தடவை பார்த்த-பின்-தான் என்னால் இயல்பு நிலைக்கு திரும்ப முடிந்தது.

7G Rainbow Colonyக்குப் பிற‌கு நான்  மிகவும் ரசித்த படம் “விண்ணத்தாண்டி வருவாயா“.இவ்வளவு மென்மையான காதல் படத்தை சமீபத்தில் பார்த்ததாக சுத்தமாக நியாபகமில்லை;குறிப்பாக படம் முழுதும் வரும் கவித்துவமான‌ காதல் காட்சிகள்,சிம்பு-த்ரிஷாவிற்கிடையே இருந்த‌ Intense Chemistry.காதலை இவ்வளவு அழகாக சொல்லிய படங்கள் தமிழில் மிக மிக குறைவு.படம் முழுக்க ஒரு அமைதி உணர்வு.எந்த கேரக்டரும் ஹை டெசிபலில் கத்தி, காதில் வலி ஏற்படுத்தவில்லை.

படத்தின் Soul என்று நான் நினைப்பது,கேரள‌ பின்னணியையும்,ஜெஸ்ஸியின் Characterisation’னும்.ஆற்றை ஒட்டிய சர்ச்,படகுகள்,கேரளாவுக்கு உரிய தென்னை ம‌ரங்கள்,பாரம்பரிய கேரளா ஸ்டைல் வீடுகள் என்று வெறும் பின்னணி இடங்கள், காட்சிகளை அவ்வளவு அழகாக்குகின்றன‌.படத்தில் கேரள‌ப்பின்னணி இல்லாத‌ காதல் காட்சிகளை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

கெளதம் படங்களில், ஹீரோயின் கேரக்டர்கள் தனித்து நிற்கின்றன.

  • ரீனா (மின்னலே)
  • மாயா(காக்க காக்க)
  • ஆராதனா(வேட்டையாடு விளையாடு)
  • மேக்னா(வாரணம் ஆயிரம்) என்று எந்த கதாபாத்திரத்திடமும் ஒரு அழகான maturity இருக்கிறது.வழக்கமாக‌ தமிழ் சினிமாவில் காட்டப்படும் அரைலூசாகவோ,அதிகபிரங்கித்தனமாகவோ,யதார்த்தத்தை மீறியவையாகவோயில்லை.

ஜெஸ்ஸியின் Characterisation நகரத்தில் இருக்கும் ஒரு படித்த girl-next-doorஐத்தான் நியாபகப்படுத்துகிறது, பேச்சிலும்,ந‌டத்தையிலும் ஒரு நளினம் இருப்பதை ரசிக்க முடிகிறது.

சிம்பு சொல்வதைப் போல‌, Jessie –அவ்ளோ அழகு!அவகிட்ட ஒரு Style இருக்கு.Classy!படிச்சவ,Well-read & Sexy too

நான் மிகவும் ரசித்த படத்தின் Interval Block காட்சியின் Youtube Linkஐ கீழே கொடுத்துள்ளேன்.மெல்லிய கிடாரின் பின்னணி இசையில், கார்த்திக்கின் பாடலில், த்ரிஷா Churchஐவிட்டு வெளியேறும் இடத்தில் ஒளிப்பதிவு அருமை.

Advertisements
 
1 Comment

Posted by on December 24, 2010 in Cinema, Classic

 

Tags: , , , , , , , , , , , ,

One response to “அனிதாவும் ஜெஸ்ஸியும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: