RSS

Aadukalam – நெத்தியடி.

17 Jan

இடைவேளை விட்ட போது மனதில் ஒரு வித பயங்கர excitement. மிரண்டு போய் வெளியே வந்தேன்.டாய்லெட்டில் சென்று கண்ணாடியில் முகத்தை பார்த்துபோது உற்சாகம் கொப்பளித்து கொண்டிருந்தது.தெரிந்தவன் தெரியாதவனையெல்லாம் செல்ஃபோனில் கூப்பிட்டு, முதல் பாதி ஏற்படுத்திய தாக்கத்தை பரபரப்போடு புலம்பிக்கொண்டிருந்தேன்.கற்றது தமிழுக்குப் பிறகு ஆடுகளம் ஒரு Brilliant Film-making.

இன்னும் நன்றாக நினைவிருக்கிறது.நண்பன் நச்சரிப்பு தாங்காமல் “பொல்லாதவன்” படத்திற்கு வேண்டா வெறுப்பாக தியேட்டரில் உட்கார்ந்தேன்.ஆனால் படம் நகர நகர,அந்த திரைக்கதையின் போக்கு வியக்க வைத்தது.பொல்லாதவனை வெறும் வணிகப்படமாக நாம் ஒதுக்கிவிடமுடியாது.அந்தப் படத்தின் திரைக்கதை அமைப்பும்,சென்னையின் நிழல் உலக மனிதர்களை காட்டிய விதமும் பாராட்டுக்குரியது.படம் நன்றாக ஓடினாலும் அது சரியாக கொண்டாடப்படவில்லை என்பதில் வருத்தமே.அப்பொழுதே தெரிந்தது வெற்றிமாறன் வழக்கமான மசாலாக்குள் அடங்கமாட்டாரென.இப்போது திட்டவட்டமாக தெரிந்து விட்டது ஆடுகளத்தில்.

படத்தின் களனான சேவற் சண்டையை நாம் பல படத்தில் பார்த்திருந்தாலும் ஆடுகளத்தை போல எந்த ஒரு படமும் இவ்வளவு அழுத்தமாக காட்டியதில்லை இனி காட்டப்போவதுமில்லை.வெறும் சேவற் சண்டையோடு நில்லாமல்அதன்பின் இருக்கும் அரசியல்,பகை உணர்வு,எந்தளவுக்கு ஒரு குறிப்பிட்ட மக்களிடம் சேவற் சண்டை முக்கியத்துவம் பெறுகிறது என்பதை காட்டிய விதம் பிரமிக்க வைக்கிறது.

மிக முக்கியமாக குறிப்பிடவேண்டியது வெற்றிமாறனின் மிரள வைக்கும் காட்சியமைப்பு அல்லது Scene Execution.ஒவ்வொரு காட்சியும் தனித்து நிற்கின்றன.அதிலும் இடைவேளைக்கு முன் நடக்கும் அந்த சேவற் சண்டை காட்சிகள்,ஒவ்வொரு ரவுண்ட் முடிந்தபோது சேவலை அடுத்த ரவுண்டிற்கு தயார் செய்யும் விதம்,தனுஷிற்கும்,பேட்டைக்காரனுக்கும் நடக்கும் ஈகோ மோதல்கள் எல்லாம் beyond appreciation.வேல்ராஜின் ஒளிப்பதிவை இங்கு கண்டிப்பாக பாராட்ட‌ வேண்டும்.சில இடங்களில் லைட்டிங்குக‌ள் அதகளப்படுகின்றன.(உ‍ம்:கிளைமேக்சில் கருப்பும் பேட்டைக்காரனும் Dull லைட்டிங்கில் சந்திக்கும் காட்சியில் ஒளிப்பதிவு கன கச்சிதம்)அடுத்த‌து அட்டகாசமான கருப்பு,பேட்டைக்காரன் Characterisation.ஜெயபாலனுக்கும் தனுஷுக்கும் Life-time-best role.Indeed,they completely stole the show.(ஜெயபாலனின் விடு,சேவல் கூண்டுகள் எல்லாம் படு அமர்க்களம்.)

பட‌த்தின் ஒரே வருத்தம் இளையராஜா இசை இல்லாதது.சில காட்சியில் பின்னணி இசைக்குப் பதிலாக Yogi-B குரலை பின்னணி இசையாக ஒலிக்க வைத்திருப்பது எரிச்சலைத் தருகிறது.படத்தின் உயிரான இடைவேளைக்கு முந்தைய காட்சிகளில் இளையராஜாவின் பின்னணி இசை இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அவ்வப்போது தமிழில் சில சுமாரான படங்கள்(மைனா,களவாணி) வந்தாலே விமர்சகர்கள் அவர்களின் வழக்கமான பல்லவியை ஆரம்பித்துவிடுவார்கள் “ரொம்ப நாளைக்குப் பிறகு தமிழில் ஒரு முக்கிய படம்“.அந்த‌ Superlative எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ ஆடுகளத்திற்கு கண்டிப்பாக பொருந்தும்.

Advertisements
 
3 Comments

Posted by on January 17, 2011 in Cinema

 

Tags: , , , , , , ,

3 responses to “Aadukalam – நெத்தியடி.

 1. Kannan

  January 18, 2011 at 5:57 pm

  I read in indiaglitz that Rajini mentioned “Aadukalam to Dhanush will be what Mullum Malarum for me”.

  And yo, I think for this movie IR would have done great justice !

   
 2. inoruvan

  January 18, 2011 at 6:41 pm

  Kannan,

  I always fear whenever Rajini praises any movie.Aadukalam is the only exception 🙂

   
 3. Prabu Raja

  January 19, 2011 at 1:49 pm

  Cant wait to see 🙂

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: