RSS

தொழில்நுட்ப வளர்ச்சியும் சில அதிகப்பிரசங்கிகளும்

19 Jan

பொதுவாக எந்தப் படம் பார்க்கும் முன் அதை பற்றி எதுவும் தெரிந்து கொள்ளப் பிடிக்காது.அது படத்தின் சுவாரசியத்தை குலைத்துவிடும் என்பது என் அபிப்பிராயம்.விமர்சனம் படிக்க மாட்டேன்.அந்தப் படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைகூட‌ TVயில் பார்க்க மாட்டேன்.படம் பார்த்தபின்தான் எல்லாம்.

ஆனால் இன்றைய தேதியில் இந்த உப‌வாசங்களை க‌டைபிடிப்பதுக்குள் தாவு தீர்ந்துவிடுகிறது.சுப்ரமணியபுரம் பெங்களூரில் Release ஆகாத சமயம்.யதேச்சையாக சென்னை சென்றேன்.சுப்ரமணியபுரம் பார்க்காமல் பெங்களூர் திரும்பக்கூடாது என்று சாந்தி தியேட்டருக்கு நானும் என் நண்பனும் சென்றோம்.அந்த நேரம் பார்த்து இன்னொரு நண்பன் திருநெல்வேலியிலிருந்து செல்ஃபோனில் அழைக்க…

நான், “மாப்ள!! சுப்ரமணியபுரம் படத்துக்கு வந்துருகேம்ல,படம் முடிந்சு கூப்புடுறேன்

நண்பன், “சரிலே, நாளைக்கு Call பண்றேன்” என்று இணைப்பைத் துண்டிக்க முயல‌,அப்போதாவது நான் சும்மா இருந்து தொலைத்திருக்கலாம்.ஆனால் விதி வலியது.

நான், “நீ படம் பாத்தியா ? பட்டைய கிளப்புச்சா” என்று வலிய போய் வாங்கி கட்டிக் கொண்டேன்.

நண்பன், “என்ன படம்ல,கடசில எல்ல பயலும் செத்துருவானா,அந்த எழவ பாக்கணுமா” சரி வச்சுறேன்.

அந்த பதிலை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.என்ன செய்ய ஏது செய்ய என்று ஒன்றும் பிடிபடவில்லை.திரும்பவும் பூமி 2 நிமிஷம் முன்னால் போய் விடாதா என்று தோன்றியது.அப்படி ஒரு எமாற்றம் மனதில்.ஒரு மாதமாக அந்தப் படத்தை பார்க்கும் வெறியில் இருந்த எனக்கு,ஒரே நொடியில் அந்த பதிலால் சுக்கு நூறாய் ஆயிற்று. நொந்து போய் தியேட்டருக்குள் வேண்டா வெறுப்பாய் நுழைந்தேன்.படத்தின் உயிரே கிளைமேக்ஸ்தான்.அதையே போட்டு உடைத்ததால் ப‌டத்தை சுத்தமாக ரசிக்க முடியவில்லை.2 மணி நேரம் பேருக்கு உட்கார்ந்து விட்டு வந்தேன்.இன்று வரை அந்த எரிச்சலும்,வலியும் இருக்கிறது.

இதுபோக‌ ப‌டம் வந்த இரண்டு மணி நேரத்தில் Twitter,Orkut,Blogger என்று எல்லா Social Network Siteகளிலும் படத்தை Post-Mortem செய்ய‌ ஆரம்பித்து விடுகிறார்கள்.தொழில்நுட்ப வளார்ச்சியின் மிகப்பெரிய பாதிப்பு இது.Privacy என்பதே இல்லாமல் போய்விட்டது. ஈரம் படத்திற்கு டிக்கெட் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தபோதும் இப்படித்தான்.இத்தனைக்கும் ப‌டம் வெளிவந்த மறுநாள்.எனக்கு முன் இருக்கும் ஒரு ஆசாமி அவன் நண்பனுக்கு செல்ஃபோனிலேயே ப‌டத்தின் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டான்.எனக்கு உச்ச கட்ட பயம்.அதை கேட்க கூடாதென எனக்குள்ளாகவே கெளசல்யா சுப்ரபாதத்தை முனக ஆரம்பித்துவிட்டேன். நல்ல வேளை! இடைவேளை விடுவதுக்குள் அவன் வரிசை வந்துவிட்டது.இல்லையெனில் முழு படத்தை செல்ஃபோனிலேயே ஓட்டியிருப்பான்.

இந்த மாறி மனிதர்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.தாங்கள் செய்யும் செயல்கள் படம் பார்க்க‌ வருபவர்களை எவ்வளவு தூரம் பாதிக்கிறது என்பது கூட இவர்களுக்குத் தெரியவில்லை.

இணையத்திலும் இது போன்று சில புண்ணியவான்கள் இருக்கிறார்கள்.எந்தப் படமாக இருந்தாலும் சகட்டுமேனிக்குத் தாளிக்கிறார்கள்.அதிலும் விஜய் படம் என்றால் கேட்கவே வேண்டாம்.அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து overhauling செய்துவிடுகிறார்கள்.விஜயை விமர்சிப்பதில் தனி இன்பம்,ஒரு குருர மகிழ்ச்சி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.சனியன் அதோடு தொலைந்தாலும் பரவாயில்லை.பேரிலக்கியம் படைத்தது போல ஒருத்தர் விடாமல் Email Fwd வேறு செய்து விடுகிறார்கள்.இவர்களின் வலைதளத்தின் Hit Ratioவை அதிகரிக்க இது ஒரு எளிய வழி.

கேட்டால் “விஜய் நல்ல படம் நடிச்சா நாங்க ஏன் விமர்சிக்க போறோம்” என்று Oscar Jury ரேஞ்சுக்குப் பேசுகிறார்கள். நான் இவர்களை ஒன்றே ஒன்று கேட்கிறேன்

“விஜய் நல்ல படம் நடிக்க மாட்டார்ன்னு நல்லாத் தெரியுது அப்புறம் ஏன் இன்னும் அவர் படங்களை இவர்கள் பார்க்கிறார்கள் ? “ அப்படி சிரமப்பட்டு காசை கிணற்றில் போல வேண்டுமா ? செய்ய மாட்டார்கள்.காரணம் இவர்கள் பொழப்பு ஓடாது.இவர்கள் ஒரு வகை.

இன்னொரு வகையினர் இருக்கிறார்கள்.விமர்சனத்தை பத்தி பத்தியாக எழுதி தள்ளுகிறார்கள்.படத்தின் ரீல் 12 என்றால் இவர்கள் செய்யும் விமர்சனத்தின் ரீல் அதை விட நீள‌…மாக இருக்கிறது.வயிற்றில் புளியை கரைக்கிறது.கிட்ட திட்ட தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிடுகிறார்கள். நாள் முழுதும் தலை கீழாய் நின்று யோசித்தாலும் ஐந்தாறு பத்திகளை என்னால் தாண்டமுடியவில்லை.இந்த‌ இடத்தில் முக்கியமாக ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
விமர்சனத்தில் பட‌த்தின் முக்கியமான‌ திருப்பம் மிகுந்த காட்சிகளை அல்லது கிளைமேக்சை தயவுகூர்ந்து சொல்லாதீர்கள்.இல்லை சொல்லித்தான் தீருவேன் நீ யார் கேட்க என்றால் Spoiler Alertஆவது போடுங்கள்.படம் பார்க்காதவர்கள் அதை படிக்காமல் ஆவது இருப்பார்கள்.விமர்சனத்தில் படத்தின் முக்கியமான Plus&Minusஐ சொல்லுங்கள் படத்தின் ரீலை ஓட்டாதீர்கள்.அது தியேட்டர் ஆப்ப‌ரேட்டர்கள் வேலை.

கடைசியாக‌:

படம் பார்க்க வரும் புண்ணியாத்மாகளுக்கு சில வேண்டுகோள்கள்:

 • ஃபிகரை தியேட்டருக்கு கூட்டி வந்து, படம் ஓடும்போது குசு குசு என்று பேசாமல் இருக்க‌..
 • செல்ஃபோனில் காட்டுக் கூச்சல் போடாமலிருக்க‌..
 • அவ்வப்போது திரையை மறைத்து, கும்ப‌ல் கும்பலாக தம் அடிக்க செல்லாதிருக்க‌..

தியேட்டர் ஆப்ப‌ரேட்டர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

 • இடைவேளை விட்டபின் லைட்டுகளை போட்டுத் தொலையுங்களேன்.அதற்குள் என்ன அவசரம் ?
 • End Creditsஐ முழுதாக போடுங்கள்.எந்த ஒரு (சிறு) கலைஞனுக்கும் அங்கீகாரம் மிகவும் முக்கியம்.அவன் விரும்புவதும் அதுவே.ஒன்றிரண்டு பேராவது அதை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள்.
Advertisements
 
2 Comments

Posted by on January 19, 2011 in Cinema, Society

 

2 responses to “தொழில்நுட்ப வளர்ச்சியும் சில அதிகப்பிரசங்கிகளும்

 1. Karthik

  January 19, 2011 at 9:14 pm

  Nicely written. Reflected the minds of people passionate about movies.

  But I am not sure if I am one among those annoying people 😉

   
 2. Kaarthik Arul

  January 20, 2011 at 11:06 am

  தங்கள் பதிவில் என்னுடைய எண்ணங்கள் துல்லியமாக பிரதிபலிக்கின்றன. கடைசியில் இருக்கும் வேண்டுகோள்களை நானும் அவர்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.

  இப்போதெல்லாம் முதல் இரண்டு மணி நேரங்களில் படங்களைக் கூறு போட்டு விடுவதால் முதல் நாள் முதல் காட்சியே பார்த்து விட வேண்டும். விமர்சனம் என்ற பெயரில் கதையை எழுதும் பதிவர்களை ஒன்றும் செய்ய முடியாது. நாம் தான் படம் பற்றிய பதிவுகளை நிராகரிக்க வேண்டும். ட்விட்டரில் இருந்து விலகியாதால் கொஞ்சம் நிம்மதியாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். என்னால் இன்னும் முடியவில்லை. முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

  விஜய் பற்றிய பத்தியைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. அதில் நானும் அடக்கம் என்பதால். “விஜய் படங்கள் நல்லா இல்லைன்னு சொல்லலை; நல்லா இருந்தா எல்லோருக்கும் பிடிக்கும் ” என்று சொல்லிக் கொள்கிறேன் 🙂

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: