RSS

Monthly Archives: November 2011

Mayakkam Enna.

ரொம்ப நாள் கழித்து, 7G Rainbow Colony பின்னணி இசைத் தொகுப்பைக் தொடர்ச்சியாக‌ கேட்டுக் கொண்டிருந்தேன்.ஒவ்வொரு Instrumental Piece’ஐ கேட்கும் போதும் படத்தின் காட்சிகள்  என்னையறியாமல் கண் முன் விரிகிறது.ஒரு நல்ல பின்னணி இசையின் இலக்கணம் இதுதான்.ஒரு படத்திற்கு, பின்னணி இசை எந்த அளவுக்கு காட்சிகளின் உணர்வை மேலும் வலுப்படுத்த முடியும் என்பதற்கு 7G Rainbow Colony ஒரு அழகான உதாரணம்.எத்தனை முறை கேட்டாலும், பழைய காதலை அல்லது ஏதோ ஒரு இழந்த உறவை அது மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது. இன்னும் குறிப்பாக சொன்னால், இசையைக் கேட்டவுடன் எங்காவது தனிமையில் போய் நெஞ்சில் பாரம் நீங்க‌ அழுது தீர்த்துவிடலாமா என்று தோன்றுகிறது.படம் ஏற்படுத்திய‌ பாதிப்பில் கிட்டதிட்ட ஒரு வாரம் அந்தப்பட நாயகன் கதிரைப் போல திருவல்லிக்கேணி வீதிகளில் மனம் போன போக்கில் சுற்றியலைந்தேன்.படத்தின் அட்டகாசமான விஷுவல்களில் மிரண்டு ,செல்வா அடுத்த மணி என்று பல பேரிடம் புலம்பிக் கொண்டிருந்தேன்.அன்றோடு அந்த செல்வா தொலைந்து, அதன்பின் கழுதை தேய்ந்த கட்டெறும்பானார்.மயக்கம் என்ன படத்தில் அந்த கட்டெறும்பைக் கூட காணோம்.

7G Rainbow Colony Background Score : Link

Advertisements