RSS

Monthly Archives: November 2012

துப்பாக்கி – Its Vijay Show all the way.

துப்பாக்கி பார்த்தாயிற்று.இந்தப் படம் முடிவானபோது எனக்கு படத்தின் மீது தளபதியைத் தாண்டி எந்தவொரு ஈர்ப்பும் இல்லை.முருகதாஸ்மீதும் பெரிதாக நம்பிக்கையில்லை.அவரின் ரமணா ஒன்றைத்தவிர வேறெந்தப்படத்திலும் பிரமாதமான திரைக்கதை என்று சொல்ல முடியாது.இது போக படத்தின் களம் பம்பாய் என்றும்,விஜய் மிலிட்டரி கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் என்று தெரிந்த போது வில்லு,நெஞ்சினிலே படங்கள் என் கண் முன் வந்து போனது.

ஆனால் படத்தை இன்று பார்த்த போது, நான் பயந்த விஷயங்களில் எல்லாம் முருகதாஸ் (திரைக்கதையில்) ஸ்கோர் செய்து விட்டு, வணிக சமரசத்தினால் படத்தை பஞ்சராக்கிவிட்டார்.

இன்னும் எத்தனை படங்களுக்குத்தான் விஜய் Intro சீனிற்கு இயக்குனர்கள் மண்டையைப் போட்டு உடைக்க போகிறார்களோ ? படத்தின் ஆரம்ப காட்சியே எரிச்சலை வரவழைக்கிறது.சமீபம் வந்த எல்லா விஜய் படங்களைப் போல இந்த படத்திலும் போட்டியில் வென்று “குட்டி புலிக் கூட்டம்” என்று ஒரு மகா கொடுமையான பாடலைப் பாடுகிறார்.Harris ஒன்று தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் அல்லது நல்ல ஆங்கில பாடலை காப்பி அடிக்க வேண்டும் இல்லை இசையமைப்பதை நிறுத்த வேண்டும்.படத்தின் முதல் திருஷ்டி இவர் தான்.பாடல்களில் பண்ணிய் torture பத்தாதென்று பின்னணி இசையில் வேறு.ஒரு தீம் இசையை வைத்துக் கொண்டு படம் முழுக்க ஓட்டியிருக்கிறார்.காது வலிக்கிறது. தயவுசெய்து இவர் ரமணா படத்தின் Pre-Interval சீனை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன் – ஒரு பின்னணி இசையின் இலக்கணம் என்பதை அறிய.(Watch it from from 4.00)

இரண்டாவது திருஷ்டி, விஜய்-காஜல் காதல் காட்சிகள்.முதலில் விஜய்க்கு காஜலை பிடிக்கவில்லை.பின் அவருக்கும் பிடிக்கும் போது காஜலுக்கு விஜயைப் பிடிக்கவில்லை.ஒரு வழியாய் இரண்டு பேருக்கும் பிடிக்கும் போது ஜெயராம் வந்து நம் பொறுமையை உண்டு இல்லை என்று பண்ணுகிறார்.
மேலே சொன்ன விஷயங்கள் தான் படத்தின் நல்ல திரைக்கதையை குதறி எடுத்துவிட்டது.

படத்தின் Plot என்ன ?

மிலிட்டரியில் இருக்கும் விஜய் ஒரு மாத லீவில் தன் வீட்டிற்கு வருகிறார்.வந்த இடத்தில், பம்பாய் நகரத்தில் தீவிரவாதிகளால் செய்யவிருக்கும் வெடிகுண்டு முயற்சியை முறையடிக்கிறார்.இதனால் கடுப்பாகும் தீவிரவாதிகளின் தலைவன் விஜயை கொல்ல பம்பாய் வருகிறான்.இவர்களுக்குள் நடக்கும் Cat & Mouse Game தான் படமே.

நேர்கோட்டில் பயணிக்க வேண்டிய இத்தகைய திரைக்கதையில் சிறிதும் ஒட்டாமல் இருக்கிறது சுவாரஸ்யமில்லாத விஜய்-காஜல் காதல் காட்சிகள்.எப்போதெல்லாம் திரைக்கதை சூடு பிடிக்கிறதோ, அப்போதெல்லாம், காஜல், விஜய்க்கு போன் செய்து Coffee Shop/Pub’ற்கு வரவழைத்து, பர பர திரைக்கதையை புஸ்வானமாக்கி விடுகிறார்.

இவை எல்லாவற்றையும் தாண்டி படத்தை ரசிக்க முடிவதற்கு ஒரே காரணம் – விஜய். கொஞ்சம்கூட அலட்டிக்காமல் அசால்ட்டாக செய்திருக்கிறார்.வள வள என்று பேசாமல் Body Language’இல்,கண்ணசைவில் அவர் உணர்த்துவ‌து பிரமிக்கதக்க முன்னேற்றம்.பல காட்சிகளின் ஜீவன் தளபதி நடிப்பினால் மட்டுமே உயிர் பெறுகிறது. நடு இரவில், போலிஸ் மேலதிகாரியை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று,அவரிடம் அமைதியாக பேசி, துப்பாக்கியை அவர் முன் வைப்பதாகட்டும்,தீவிரவாதியிட‌மிருந்து விஷயத்தை வாங்குவதாகட்டும் – பதற்றமேயில்லாமல் வெகு இயல்பாய் செய்திருக்கிறார்.விஜயின் ஹிந்தி,ஆங்கில உச்சரிப்பு மிக அருமை.தங்கையை மீட்கும் காட்சியில் – Turnaround என்று அவர் கத்தும் இடம் – Class!! தலைவனுக்கு இப்போதே Vijay/Filmfare Award பார்சல் செய்து வையுங்கள்.

சுறா,வேட்டைகாரன்,வில்லு என நொந்த ரசிகர்களுக்கு துப்பாக்கி மிகப்பெரிய ஆறுதல்.காஜல்-ஜெயராம் காட்சிகள்,தேவையற்ற பாடல்களை நீக்கியிருந்தால் படம் “A Wednesday” ரேஞ்சிற்கு போயிருக்கும்.இருந்தும், தளபதியின் Performance’இற்காக கட்டாயம் பார்க்கலாம்.

 
Leave a comment

Posted by on November 18, 2012 in Cinema