RSS

Monthly Archives: January 2015

ஐ.

பாய்ஸ் படத்திற்குப் பிறகு இத்தனை எதிர்மறையான விமர்சனங்கள் ஒரு ஷங்கர் படத்திற்க்கு வந்ததில்லை. ஐ அந்த சாதனையை செய்திருக்கிறது. படம் வரும் முன்பே எனக்கு பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லை,இருந்தும் ஒரிரு வாரங்கள் கழித்தாவது பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது தடாலடியாய் தாக்கிய‌ இணைய விமர்சனங்கள் கொஞ்சமேனும் மிச்சமிருந்த ஆவலையும் துடைத்தெறிந்தது.600 INR தப்பியது.குழந்தைக்கு பாப்கார்ன் செலவு,ஆட்டோ செலவு வேறு சேர்த்தால் கூடுதல் 200 ரூபாய் சேர்த்துப் பிழைத்தது. பாதகமில்லை.ஜெயா டிவியில் விளம்பர இடைவேளைக்கிடையில் போனால் போகிறது என்று படத்தை போடும் போது பார்த்து கொள்ளலாம். நான் சொல்ல விரும்புவது இரண்டே விஷயங்கள்தான்.

தமிழ் சினிமாவில் இரண்டு அபத்தமான கற்பிதங்களை யார் கட்டமைத்தது என்று தெரியவில்லை.

1. ரசிகர்கள் முதல் பத்திரிகைகள் வரை படத்தின் பட்ஜெட்டை பற்றி ஏன் இத்தனை அலட்டிக்கொள்கிறார்கள் ? 100 கோடி 150 கோடி என்று இவர்கள் வாய் பிளக்கும்போது ஆச்சர்யமாகயிருக்கிறது. படத்தின் பட்ஜெட்டைப் பற்றி ஒரு ரசிகன் ஏன் இத்தனை ஆவல் காட்டவேண்டும் ? கழுதை, 5 லட்சமோ 50 கோடியோ ஒரே டிக்கெட் விலையைத்தான் நாம் கொடுக்க வேண்டும். 150 கோடி ஒரு படத்தின் தரத்தை மேம்படுத்திவிடுமா ?

ஒரு முழு ரயிலை வாடகைக்கு பிடித்தோம்,படம் பிடிக்க யாருக்குமே அனுமதி கிடைக்காத பகுதியில் மிகுந்த சிரமப்பட்டு படம் பிடித்தோம்,ஒப்பனை கலைஞரை நியுசாலாந்திலிருந்து வரவழைத்தோம்,ஹீரோ தினமும் 8 மணி நேர ஜிம்மில் இருந்தார் போன்ற உப்பு சப்பில்லாத Trivia’க்களை இயக்குனர்கள், நடிகர்கள் தொலைக்காட்சியில் உளரும் போது எரிச்சல் வருகின்றது.என்ன அபத்தமிது ? இந்த புண்ணாக்கு Details எல்லாம் ரசிகனுக்கு எதற்கு ? ஹீரோ பத்து முட்டை பச்சையாக குடித்தார்,பத்து நாள் சோறு தண்ணி பல்லில் படவில்லை என்பதற்காக ரசிகர்கள் படத்தை கொண்டாடவேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்தனை சிறுபிள்ளைத்தனம் ? அன்று இர‌வு முழுதும் க‌ண்விழித்து ப‌டித்து ஆனால் கேவலமாக‌ ப‌ரிட்சை எழுதி Microprocessor’இல் அரியர் போட்ட examiner’ஐ நான் கோபித்த கொள்ள முடியுமா ?

கதைக்கான Inspiration எங்கிருந்து வந்தது,திரைக்கதை நுணுக்கங்களைப் பற்றி,காட்சிமொழியை கையாண்டவிதம் போன்றவற்றை விடுத்து சகலத்தையும் பேசிக்கொண்டிருக்கிறோம்.

2. இதோடு இன்னொரு அப‌த்த‌ம் கெட்-அப்பை மாற்றுவ‌து. ந‌டிப்பென்ப‌து வெறும் கெட்-அப்பை மாற்றுவ‌து ம‌ட்டுமா ?  ஏன் ந‌ம் ந‌டிக‌ர்க‌ள் கெட்-அப்பை மாற்றுவ‌தில் ஆலாய் ப‌றக்கிறார்க‌ள் ? நாலு ம‌ணி நேர‌ம் பொறுமையாக மேக்க‌ப்பை போட்டு கொண்டால் ந‌ல்ல‌ ந‌டிப்பாய்விடுமா ? என்ன‌ கொடுமை இது!! உட‌ல்மொழி,பாத்திர‌த்த‌ன்மை உண‌ர்ந்து Underplay/Overplay செய்வ‌து,வ‌ச‌ன‌ உச்ச‌ரிப்பில் க‌வ‌ன‌ம் செலுத்துவ‌து போன்றவ‌ற்றை ஏன் காற்றில் ப‌ற‌க்க‌ விட்டுவிடுகிறார்க‌ள் ?

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த Lead Performance’கள் எல்லாம் சாதாரண கெட்-அப்பில் வந்தவையே: வ‌றுமையின் நிறம் சிக‌ப்பு, நிழ‌ல் நிஜ‌மாகிற‌து, முத‌ல் ம‌ரியாதை, தேவ‌ர் ம‌க‌ன், ஆடுக‌ள‌ம்,உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும்.

சுஜாதா, பாய்ஸில் சொன்ன‌தை கொஞ்ச‌ம் மாற்றி சொன்னால் :

சினிமாவை/நடிப்பை எல்லாம் செய்யாதீங்க‌ வாழ்க்கையிலிருந்து எடுங்க‌.

Advertisements
 
Leave a comment

Posted by on January 30, 2015 in Cinema

 

காதல் ஆசை யாரை விட்டதோ…

அஞ்சான் பாடல்கள் விடாது தொலைக்காட்சி வழியாக துரத்திக் கொண்டிருந்தாலும் ஒரு நாளும் நின்று நிதானித்து ரசித்ததில்லை.ஆனால், நேற்று காலை தொலைக்காட்சியில் யதேச்சையாக ஒலித்துகொண்டிருந்த‌போதுதான் – இத்தனைக்கு அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த பரபரப்பில்- சட்டென பிடித்துப்போனது.கடந்த சில நாட்களாக ஷமிதாப் பாடல்களை கேட்டுகொண்டிருந்தவன் இன்று ஏனோ அதை கேட்கப் பிடிக்காமல் இந்த பாடலையே repeat audience’ஆக கேட்டுக்கொண்டிருக்கிறேன். யுவனின் தமிழ் உச்சரிப்பு அத்தனை சிலாக்கியமாக இல்லாவிட்டாலும் அவர் காதல் பாடல்களில் ஒரு தனி வசீகரம்,மயக்கம் இருக்கத்தான் செய்கிறது.இந்தப் பாடலுக்கு Qawwali style கூடுதல் அழகை தருகிறது.இஸ்லாத்துக்கு மாறியதற்கு Tribute’ஆக Yuvan இதை Compose செய்தாரா அல்லது தற்செயலாக இது நிகழ்ந்ததா ?

 
Leave a comment

Posted by on January 23, 2015 in Anjaan, ரசனை

 

Tags: ,

ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமுது மீரான்

சமீபத்தில், நான் மிகவும் ரசித்து படித்த நாவல் “ஒரு கடலோர கிராமத்தின் கதை”. நாவலை முடித்தபின் முதலில் தோன்றியது எப்படி இந்த நாவல் சினிமாக்காரர்களிடமிருந்து தப்பியது ? நாவலை படமாக்கியிருந்தால், கடலோர பின்னணி கொண்ட‌, அசலான இஸ்லாமிய கதாபாத்திரங்களின் வார்ப்போடு நல்லதொரு திரைப்படம் கிடைத்திருக்கும். நமக்கு அத்தகையொரு அதிர்ஷ்டம் இன்று வரை வாய்க்கவில்லை; கிடைப்பதெல்லாம் அரைவேக்காட்டு – கடற்கரை வட்டாரத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத பாஷை பேசிக்கொண்டிருக்கும் கதாபாத்திரங்கள் – பட‌ங்கள். (கடல்,சிட்டிசன்,மரியான்)

படித்த எல்லா நாவல்களிலும் இப்படி தோன்றுவதில்லை, சில நாவல்கள்தான் சினிமாவிற்கு தோதாகப் படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது எளிமையான கதை,புதிதான கதைக் களன்,சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் அவர்களுக்குள்ளே நடக்கும் உரையாடல்கள். கிளாசிக் நாவல்களுக்கேகுரிய தீவிர Monologue/Stream-of Consciousness writing – ஆதவன் சிறுகதைகளில் வருவது போல மனம் ஒரு கதாபாத்திரமாகி ஓயாது பேசிக்கொண்டயிருக்கும்போது படமாக்குவது வெகு சிக்கலாகிறது, அப்படியே படமாக்கினாலும், நாவலின் ஆன்மா சினிமாவில் இல்லாமல் போகிறது. இதனால்தான் வெகு சில‌ கிளாசிக் நாவல்களே படமாக்கப்படுகின்றன அதில் சொற்பமே வெற்றியும் பெறுகின்றன.

meeran

கதை, முதல் உலகப் போர் காலகட்டத்தில், இஸ்லாமிய கிராமமான தேங்காய்பட்டணத்தில் நடக்கிறது. நாவலின் பிரதான கரு: தேங்காய்பட்டணத்தில் வாழும் பண்ணையாரான,வடக்கு வீட்டு முதலாளி எனும் அகமதுவின் வீழ்ச்சியை படிப்படியாக விவரிக்கிறது. ஆனால் Subtext’ஆக கல்வியறிவுயில்லாத அந்த மக்களில் விரவியிருக்கும் அதீத மூட நம்பிக்கைகள், போலி மதகுருமார்களின் மீது கண்மூடித்தனமான பற்று,பெண்ணடிமைத்தன போக்கு என பலதைப் மெல்லிய நாஞ்சில் நக்கலோடு பேசுகிறது.

இரண்டு விஷயங்கள் என்னை பெரிதும் கவர்ந்தது ஒன்று நாவல் முழுதும் வரும் உருது-மலையாளம் கலந்த வட்டார வழக்கு.இன்னொன்று இயல்பான‌ கதாபாத்திரங்கள் – அவர்களின் இஸ்லாமிய பேர்கள்.

சுயலாபத்திற்காக, ஆங்கில கல்விமுறையை வரவிடாமல் தடுக்கும், மத ஆசிரியர் அசனார் லெப்பை; நிலபிரபுத்துவ வரைமுறைகளுக்குள் அடங்க விரும்பாத, முதலாளியை கிராமத்திலேயே தனியாளாக எதிர்க்கும் மஹ்முது; கருமியான பெட்டிக்கடை உசேன்பாய்; உச்சபட்சமாக, அந்த ஊரில் ஒரு ஜின்னை(சாத்தான்)ஒட்ட வந்திருப்பதாக சொல்லி, முதலாளி விட்டில் சுகமாய் வாழும் போலி மதகுருவான தங்கள் என, பிரமாதமான கதாபாத்திரங்கள் வாசிப்பை அலாதியாக்குகிறது.

 
Leave a comment

Posted by on January 15, 2015 in இலக்கியம், Novel