RSS

Category Archives: Kanaiyaazhi

Kanaiyaazhi Kadaisi Pakkangal.

கணையாழி என்னும் சிறு பத்திரக்கையில் சுஜாதா, 1965-1998 வரை ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிய கட்டுரைகளின் மொத்த தொகுப்பு, “கணையாழி கடைசி பக்கங்கள்”.புத்தகத்தை வெறித்தனமாக‌ ரசித்து‍-cum-சிரித்து படித்துக் கொண்டிருக்கிறேன்.கீழே வைக்க மனமில்லை.விளைவு. பாத்ரூமிற்குகூட பின்தொடர்கிறது.ஒரு நாவலோ,தொடர்கதையோ இந்த அனுபவத்தை தருவதில் ஆச்சர்யமில்லை.ஒரு கட்டுரைத் தொகுப்பு இவ்வாறு down-to-earth ஸ்டைலில் எழுதப்பட்டிருப்பது தான் சுவாரஸ்யமே.சுஜாதாவைத் தவிர, யாருக்கும் இது வராத கலை.

கணையாழி கட்டுரைகளில் முற்றிலும் வேறுபட்ட சுஜாதாவை பார்க்க முடிகிறது.நிறைய‌ அபத்தங்களை கொஞ்சம் Bold’ஆகவே விமர்சிக்கிறார்.கட்டுரைகளின் ஆரம்ப கட்டத்தில் சுஜாதாவின் வயது 30 தான்.அதனால் அந்த இளவயது aggressiveness அவர் எழுத்திலும் பிரதிபலிப்பதில்ஆச்சர்யம் ஏதுமில்லை.கட்டுரைகளில் உள்ள அபார Sense of humour நம்மை மறந்து சிரிக்க வைக்கிறது.தமிழ் சினிமா அபத்தங்கள்,மோசமான பாடல் வரிகள்,அரசியல்,வெகுஜன ஊடகங்களில் பரவியிருக்கும் மலிவான வணிகத்தன்மை,தமிழ் இலக்கியம்,தமிழரின் பழக்க வழக்கங்கள் என்று எல்லாம் அவரிடம் படாது பாடு படுகிறது.

சுஜாதாவின் கட்டுரைகளை வகைப்படுத்துவது கடினம்.அறிவியல்,சங்க இலக்கியம்,கணிப்பொறியியல்,உலக,தமிழ் சினிமா,ஆங்கில இலக்கியம்,இசை,மலையாள,வங்காள,ஹிந்தி சினிமாக்கள்,மராத்தி நாடக‌ங்கள்,சிறுகதைகள்,நாவல்கள், ஹைக்கூ,புதுக்கவிதை,ஜென் தத்துவம்,தொலைக்காட்சி என்று எல்லாவற்றையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.அன்று Google இல்லாத குறையைத் தீர்த்திருக்கிறார்.

சுஜாதாவின் எழுத்து நடை தமிழில் ஒரு Trend Setting என்று சொல்லுவேன்.இன்று வரை அவர் பாதிப்பில்லாமல் யாரும் எழுத முடியாது.அவர் எதையும் தீர்மானித்து எழுதுவதில்லை.எழுத்தின் Contentஐ பொருத்துத்தான் கட்டுரை அளவைத் தீர்மானிக்கிறார்.சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லிவிட்டு போவது அவரின் தனித்தன்மை.பக்கத்தை நிரப்ப வேண்டும் என்று ஜவ்வு போல் கட்டுகரைகளை நீட்டிப்பதில்லை.சில சமயம் ஒரே பக்கத்தில், நான்கு சின்ன சின்ன கட்டுரைகள் எழுதுகிறார்.சில சமயம் ஒன்று அல்லது இரண்டோடு நிறுத்திகொள்கிறார்.

குறுக்கெழுத்து போட்டிகளும்,உப்பு சப்பில்லா கேள்விகளும் இருந்த அக்காலத்தில்(இக்காலத்திலும்தான்) Lateral Thinking கேள்விகளை கேட்டு, வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் ஒரு intellectual interactionஐ அறிமுகப்படுத்தியவர் சுஜாதா.

1960களில் எழுதிய கட்டுரைகள் இன்றுவரை அதன் Freshnessஐ இழக்காமல் இருப்பது சாதாரண விஷயமல்ல.சில சமயம், என் ப்ளாக்கில் உள்ள பழைய கட்டுரைகளை சும்மா படித்துப் பார்ப்பேன்.நாலு வரிகளுக்கு மேல் வாசிக்க முடியாது.இந்த கண்றாவிய‌வா நாம எழுதினோம் என்ற எனக்கே ஒரு வெட்க உணர்வு வரும்.நல்ல எழுத்து காலம் கடந்தாலும் அதன் தனித்தன்மையை இழக்காது. நான் அடிக்கடி மனதில் சொல்லிக் கொள்வேன்.ந‌ல்ல எழுத்து, திருவள்ளுவர் முகத்தைப் போல் இருக்க வேண்டும்.எந்த வயதில் பார்த்தாலும் வள்ளுவரின் முகம் முதல் தடவை பார்க்கும் உணர்வைத் தருகிறது.சுஜாதாவின் எழுத்தும் அப்படித்தான்.சுஜாதா என்ற‌ ஆளுமையின் முழு வெளிப்பாடு கணையாழி கடைசி பக்கங்கள்.

 
1 Comment

Posted by on January 21, 2011 in Kanaiyaazhi, Sujatha, Tamil Literature, Writers