RSS

Monthly Archives: August 2010

Cinema – RAQ.(Randomly Asked Questions)

ட்விட்டர் நண்பர் ஐகேரஸ்ப்ரகாஷின் தளத்தில் பார்த்த இந்த Meme எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அவரின் அனுமதி இல்லாம‌லே சுட்டுவிட்டேன்.

இதோ சினிமாவைப் பற்றி என்…

1.எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள் ?

சரியாக ஞாயபகமில்லை.தங்கமகன்,சகலகலாவல்லவன், போன்ற‌ இரண்டு-மூன்று படங்கள் நினைவிற்கு வருகின்றன.அதுவும் முழுதாக பார்க்கவில்லை,அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி பாதியிலேயே வந்துவிட்டேன்.சிறுவயதில் எனக்கு சினிமா மேல் அப்படி ஒரு வெறுப்பு. (ஆச்சரியமாக இருக்கிறது, இப்போது ஒரே படத்தை பத்து‍‍,இருபது தடவை பார்த்து கொண்டிருக்கிறேன்.)

2.கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்

டிவிடியில் ஆண்பாவம் பார்த்தேன்.சில காட்சிகள் தான்.படத்தைவிட‌ நான் மிகவும் ரசித்தது பின்னணி இசை,வி.கே.ராமசாமி,கொல்லங்குடி கருப்பாயின் யதார்த்தமான‌ நடிப்பு.

3.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

இராவணன்.(நல்ல வேளை, என்ன உணர்ந்தீர்கள் என்று கேட்கவில்லை.)

4.உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

அப்படி ஒரு புடலங்காயும் கிடையாது.படத்தையும்,கலைஞர்களையும் ரசிக்கிறதோடு சரி.அவர்களின் Off-Screen Personality’ஐப் பற்றி கண்டு கொள்வதே இல்லை

5.மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா.

“கற்றது தமிழ்” , “உதிரிப்பூக்கள்” , “7G – ரெயின்போ காலனி” , “வறுமையின் நிறம் சிகப்பு”.

6.தமிழ் சினிமா இசை?

எனக்கு தெரிந்து வரை இந்த ஒரு துறையில் தான் நாம் உலகத்தரத்தில் இருக்கிறோம் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.படத்திற்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதை இந்தியாவிற்கே உணர்த்திய‌வன் தமிழன் ஆயிற்றே.

[உதாரணம்.]

இரு காட்சிகளுக்கும் பின்னணி இசையின் Theme ஒன்றுதான்.
ஆனால் வெறும் வாத்தியங்களின் வேறுபாட்டின் மூலம் சந்தோஷமான நிகழ்விற்கும்,சோகமான நிகழ்விற்கும் இளையராஜா எப்படி வித்தியாசப்படுத்துகிறார் என்று பாருங்கள்.

Do watch @ 0.06 -0.49, 2.52 – 3.16

7.தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இதற்கு ஒரு வரியில் பதிலளிக்க முடியாது.ஆனால் ஒன்று மட்டும் சொல்ல முடியும். “கற்றது தமிழ்.” போன்ற படங்களை பார்க்கும் போது தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் மோசமாகயில்லை.இருந்தாலும் Dev.D,A Wednesday,Lage Raho Munnabhai,Taare Zameen Par போன்ற படங்கள் வராதா என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.

8.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

நிறைய.
இணையம்,விகடன்,குமுதம் தொடங்கி ஹிந்து வரை வாசிப்பதுண்டு.ஜூனியர் விகடனில் கூட முதலில் சினிமா பக்கத்தை தான் தேடுவேன்.குறிப்பாக எனக்கு பிடித்தமான கலைஞர்களைப் பற்றி வரும் செய்திகளைப் வாசிக்கப் பிடிக்கும்.கிசுகிசு பிடிக்காது.படம் பார்க்கும்முன் விமர்சனம் படிக்கப் பிடிக்காது.

9.தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

சில ஆங்கில/உலக படங்க‌ள் பார்த்த‌துண்டு.முதலில் இந்திய படங்களை முடித்துவிட்டு ஆங்கிலத்திற்கு தாவுவோம் என்பது என் எண்ணம்.பழைய ஹிந்திப் படங்கள் பிடிக்கும்.சத்யஜித்ரே படங்கள் பிடிக்கும்.அவர் படங்களில் மிகவும் பிடித்தது.Ganashatru,Uttaran,Aparajito.
உலகசினிமாவில்: Bicycle Theives(Italian),The Way Home(Korean).
Hindi: A Wednesday

10.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

கற்பனையே பயங்கரமாக இருக்கிறது.நமிதா-வீட்டு-நாய் குட்டி போட்டதை முதல் பக்கத்திலும்,சுஜாதவின் மரணத்தை ஏதோ ஒரு மூலையிலும் போடும் செய்திதாள்கள் உள்ள தமிழ்நாட்டில் இப்படி ஒரு கேள்வியா ?

இவர்கள் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என் நினைக்கிறேன்.

1.Karthik.

2.Kannan Ekanath.

3.Kaarthik.

4.Premnath.

 
2 Comments

Posted by on August 15, 2010 in Cinema