RSS

Monthly Archives: December 2010

என்னை உலுக்கிய முதல் வரி.

ஒரு நல்ல நாவலோ அல்லது நாவலில் இருக்கும் குறிப்பிட்ட கதாபாத்திரமோ மனதை பாதிக்கும்.அதன் விளைவாக‌,சில நாட்கள் அந்த நாவலின் நினைவுகள் விடாது மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.ஆனால் ஒரு நாவலின் முதல் வரியை மட்டும் படித்து,அது ஏற்படுத்திய பிரமிப்பிலிருந்து வெளியே வர முடியாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.அந்த நாவலைப் படிக்கும் எவரும் அதை உணர்வார்கள் என்றும் உறுதியாக சொல்லமுடியும்.

பொதுவாக நாவலின் முதல் வரி எப்படி இருக்கும் ?

  • கிழக்கு வெளுத்தது ; பறவைகள் கூட்டை விட்டு இரை தேட கிளம்பின‌.
  • அது ஒரு மலை மேல் இருக்கும் அழகிய கிராமம்.
  • ஆளில்லா சாலையில் அவன் நடந்து வந்து கொண்டிருந்தான்.
  • பஸ் சடாரென் திருப்பத்தில் வளைந்தது.

இப்படி பழகிவிட்டு :

அக்கரையிலிருந்து வந்த‌ ஒரு நீராவிப் படகு பினாங்கு துறைமுகத்தை அடைந்தபோது மணி 3.36.


கடலுக்கு அப்பால்” என்ற நாவலின் முதல் வரி அது.படித்த போது பிரமிப்பின் உச்சத்துக்குச் செல்லாமல் இருக்க முடியவில்லை.நாவலை எழுதியவர் ப.சிங்காரம்.

ப‌.சிங்காரம் மொத்தம் இரண்டு நாவல்களை எழுதியுள்ளார்.

  • கடலுக்கு அப்பால்.
  • புயலிலே ஒரு தோணி.

இரண்டும் நாவல்களும் இரண்டாம் உலகப்போர் பின்னணியில் புனையப்பட்டது.

ப.சிங்காரம், இளம் வயதில் மலேசியாவில் இருந்த போது பல ராணுவ மூகாம்களுக்கு சென்றிருக்கிறார்;ராணுவ வீரர்களுடன் நல்ல நட்பு இருந்திருக்கிறது.அதன் மூலம் யுத்த சம்பவங்களை தெரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் இரண்டு நாவல்களை எழுதியுள்ளார்.இரண்டு நாவல்களும் தமிழில் மிக முக்கிய நாவல்கள் என‌ இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் ஒப்புகொள்கிறார்கள்.தமிழில் யுத்த களனை கொண்டு நாவல் இருப்பது மிகுந்த ஆச்சர்யம்.துரதிர்ஷடவசமாக நம் பலருக்கும் இது தெரியவில்லை. நாவலைப் பிரசுரிக்க  ப.சிங்காரம் மிகுந்த சிரமப்பட்டிருக்கிறார்.1950’ல் கடலுக்கு அப்பால் எழுதியுளளார்.ஆனால் 1959’ல்தான் அது பிரசுருமாகியது.

ப.சிங்காரத்தின் முழு பேட்டிக்கான இணைப்பு கீழே :

http://azhiyasudargal.blogspot.com/2010/08/blog-post_21.html

http://azhiyasudargal.blogspot.com/2011/01/blog-post_29.html

அவசியம் படிக்க வேண்டிய நேர் காணல்.

தமிழினி பதிப்பகம் இப்போது இந்த இரண்டு நாவல்களையும் மறு பதிப்பு செய்கின்றன.(பதிப்பகம் தவறாக இருந்தால் மன்னிக்கவும்) புத்தக க‌ண்காட்சியில் கண்டிப்பாக கிடைக்கும்.விருப்பமுள்ளவர்கள் வாங்கி கொள்ளவும்

 
2 Comments

Posted by on December 31, 2010 in Novel, P.Singaram, Tamil Literature, Writers

 

Tags: , , ,

Chennai Book Fair – 2011

சில தனிப்பட்ட காரணங்களால் ஜனவரியில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு செல்ல முடியாத சூழ்நிலை.போன புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களே இன்னும் முழுதாக படித்து முடிக்காமல் ஷெல்ஃப்களில் தூங்குகிறது.இருந்தாலும் மனம் அமைதியற்று அலைகிறது.எப்படியாவது Book Fairக்குச் சென்றுவிட முடியாதா என்று ஏங்குகிறது.சென்னையில் இருந்த‌போது வருடந்தவறாமல் புத்தக சந்தைக்குச் சென்றாலும், கையில் காசில்லாததால் ஒரு சில புத்தகங்களோடு வர வேண்டிய நிலை.இப்போது கூரையைப் பிய்த்து கொட்ட வில்லையென்றாலும், ஏதோ முடிந்தவரையில் விரும்பும் புத்தகங்களை வாங்கமுடிகிறது என்பதே மிகப்பெரிய சந்தோஷம்.புத்தக கடைகளிலும், டிவிடி கடைகளிலும் அப்படி ஒரு வெறி வருகிறது.பிடித்தவற்றை ஒட்டுமொத்தமாக மூட்டைகட்டிக் கொண்டு வந்தால் என்ன என்று.

இப்போது விஷயத்திற்கு வருவோம்.

நான் தவறாமல் விரும்பி படிக்கும் எழுத்தாளர் பா.ராகவன் தளத்தில் புத்தக கண்காட்சிக்குச் செல்வோர்க்கு சில‌ அனுபவபூர்வமான குறிப்புகளை வழங்கியுள்ளார்.போகும் முன் அதை படித்துவிட்டு செல்வது நல்லது.சில அசெளரியங்களை தவிர்க்க இயலும்.

இது போக நான் அனுபவித்த‌ சில குட்டி குட்டி இம்சைகளையும் சொல்கிறேன்.

  • கூடுமானவரையில் கண்காட்சிக்கு முதல் நாள் செல்லாதீர்கள்.அநேக ஸ்டால்கள் பாதி திறந்த‌ ஷெல்ஃபுகளுடன் வரவேற்கும்.அப்போதுதான் ஷெல்ஃபுகளில் புத்தகங்களை பக்த சிரதையோடு அடுக்கி கொண்டிருப்பார்கள்.நீங்கள் “மோகமுள்” என்று போய் கேட்டால், ஸ்டாலில் இருப்பவர் பெயருக்குத் தேடிவிட்டு,உங்களை பார்த்து “சார், மோகமுள் எப்படி விட்டு போச்சுன்னு தெரில, மதியம் இல்ல நாளைக்கு வந்தீங்கன்னா நல்ல காப்பியாத் தரேன்” என்று அசடு வழிவார்.
  • கண்காட்சிக்கு சென்றவுடன் நீங்கள் செல்லும் முதல் பதிப்பகத்திலேயே விரும்பிய புத்தகத்தை வாங்காதீர்கள்.முதலில் எல்லா ஸ்டால்களில் உள்ள புத்தகங்க‌ளை ஒரு தடவையாவது பாருங்கள்.ஒரே புத்தகத்தின் விலை வெவ்வேறு பதிப்பகங்களில் வேறுபடும்.உதாரணமாக “மோகமுள்” நாவல் ஒன்றிற்கு மேற்பட்ட அச்சகங்கள் மறுபதிப்பு செய்கின்றன.ஆனால் விலை ஒரே போல் இருப்பதில்லை.உங்களுக்கு எது செளரியப்படுகிறதோ அந்த விலைக்கு வாங்குங்கள்.
  • Debit/Credit Cardஐ தேய்த்துக் கொள்ளலாம் என்று கனவு காணாதீர்கள்.”சார், கார்டுல ஏதோ Problemன்னு நினைக்கிறேன். Cash இருக்கா ?” என்பார்.Problem நமது கார்டில் இல்லை அவர்கள் மெஷினில்தான். ஒன்று, கார்டை தேய்க்கும் மெஷின் ஒழுங்காக நெட்வொர்க்கில் Connect செய்யப் பட்டிருக்க மாட்டாது; இல்லை, இந்த பாழாய்ப்போன Signal கிடைக்காது.பர்ஸில் பணத்தை தேவைக்கேற்ப்ப வைத்துக்கொள்வது உத்தமம்.
  • வாங்கிய புத்தகங்களை ஒரு முறையாவது சரி பாருங்கள்.எல்லா எழுத்துக்களும் தெளிவாக இருக்கின்றனவா,பக்க எண்கள் வரிசையாக இருக்கிறதா என்று.வீட்டில் வந்து ஒரு சிறுகதை அந்தரத்தில் தொங்குகிறது, அதன் முடிவு தெரியவில்லையே என்று புலம்பாதீர்கள்.

கடைசியாக சென்னையில் இருந்து கொண்டு கண்காட்சியைத் தவ‌ற விடாதீர்கள்.பெங்களூரில் இருந்து ஏக்க பெருமூச்சுடன் தவிக்கும் எங்களை போன்றவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும்.

 
5 Comments

Posted by on December 30, 2010 in 2011, Book Fair, Madras, Notice Board., Society

 

Tags: , , , ,

அனிதாவும் ஜெஸ்ஸியும்.

ஏழு கழுதை வயதானாலும் அழகான காதல் படங்களைப் பார்க்கும்போது இதயத்தில் வலி/ஏக்கம்/உற்சாகம் கலந்த உணர்வுகள் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை.பழைய நினைவுகளை,ஏக்கங்களை அது கிளறி விட்டு கொண்டேயிருக்கின்றது. காதலைப் போலவே, காதல் படங்களும் என்றும் அலுப்பதில்லை.சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்த போது,தேவியில் 7G Rainbow Colony பார்த்து பித்து பிடித்தவன் போல் ஆனேன்.அனிதாவின்(சோனியா அகர்வால்) மரணம், கதிரைவிட (ரவிகிருஷ்ணா) என்னை அதிகம் பாதித்தது.தியேட்டரைவிட்டு வெளியே வர மனமேயில்லை.கனத்த வலியோடு நானும் என் நண்பனும் வெளியே வந்தோம்.அடுத்த காட்சிக்கு நின்றோர்களை பார்க்கும்போது பொறாமையாகவும், வருத்தமாகவும் இருந்தது.படம் பார்க்க உள்ளே போக போகிறார்களே என்ற பொறாமையும்;அனிதாவின் மரணத்தை அவர்கள் எப்படி எதிர் கொள்ள போகிறார்கள் என்ற வருத்தமும் இருந்தது.அடுத்த ஒரு வாரம் படத்தின் இறுதி காட்சிகள் மனதில் திரும்ப திரும்ப ஓடிக்கொண்டிருந்தது.வேறு எதிலும் என்னால் கவனம் செலுத்தமுடியவில்லை.கிட்ட திட்ட ஆறு தடவை பார்த்த-பின்-தான் என்னால் இயல்பு நிலைக்கு திரும்ப முடிந்தது.

7G Rainbow Colonyக்குப் பிற‌கு நான்  மிகவும் ரசித்த படம் “விண்ணத்தாண்டி வருவாயா“.இவ்வளவு மென்மையான காதல் படத்தை சமீபத்தில் பார்த்ததாக சுத்தமாக நியாபகமில்லை;குறிப்பாக படம் முழுதும் வரும் கவித்துவமான‌ காதல் காட்சிகள்,சிம்பு-த்ரிஷாவிற்கிடையே இருந்த‌ Intense Chemistry.காதலை இவ்வளவு அழகாக சொல்லிய படங்கள் தமிழில் மிக மிக குறைவு.படம் முழுக்க ஒரு அமைதி உணர்வு.எந்த கேரக்டரும் ஹை டெசிபலில் கத்தி, காதில் வலி ஏற்படுத்தவில்லை.

படத்தின் Soul என்று நான் நினைப்பது,கேரள‌ பின்னணியையும்,ஜெஸ்ஸியின் Characterisation’னும்.ஆற்றை ஒட்டிய சர்ச்,படகுகள்,கேரளாவுக்கு உரிய தென்னை ம‌ரங்கள்,பாரம்பரிய கேரளா ஸ்டைல் வீடுகள் என்று வெறும் பின்னணி இடங்கள், காட்சிகளை அவ்வளவு அழகாக்குகின்றன‌.படத்தில் கேரள‌ப்பின்னணி இல்லாத‌ காதல் காட்சிகளை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

கெளதம் படங்களில், ஹீரோயின் கேரக்டர்கள் தனித்து நிற்கின்றன.

  • ரீனா (மின்னலே)
  • மாயா(காக்க காக்க)
  • ஆராதனா(வேட்டையாடு விளையாடு)
  • மேக்னா(வாரணம் ஆயிரம்) என்று எந்த கதாபாத்திரத்திடமும் ஒரு அழகான maturity இருக்கிறது.வழக்கமாக‌ தமிழ் சினிமாவில் காட்டப்படும் அரைலூசாகவோ,அதிகபிரங்கித்தனமாகவோ,யதார்த்தத்தை மீறியவையாகவோயில்லை.

ஜெஸ்ஸியின் Characterisation நகரத்தில் இருக்கும் ஒரு படித்த girl-next-doorஐத்தான் நியாபகப்படுத்துகிறது, பேச்சிலும்,ந‌டத்தையிலும் ஒரு நளினம் இருப்பதை ரசிக்க முடிகிறது.

சிம்பு சொல்வதைப் போல‌, Jessie –அவ்ளோ அழகு!அவகிட்ட ஒரு Style இருக்கு.Classy!படிச்சவ,Well-read & Sexy too

நான் மிகவும் ரசித்த படத்தின் Interval Block காட்சியின் Youtube Linkஐ கீழே கொடுத்துள்ளேன்.மெல்லிய கிடாரின் பின்னணி இசையில், கார்த்திக்கின் பாடலில், த்ரிஷா Churchஐவிட்டு வெளியேறும் இடத்தில் ஒளிப்பதிவு அருமை.

 
1 Comment

Posted by on December 24, 2010 in Cinema, Classic

 

Tags: , , , , , , , , , , , ,